×

படங்களை குறைத்தது பற்றி நிக்கி கல்ராணி

ஜீவா  ஜோடியாக கீ படத்தில் நடித்துள்ளார், நிக்கி கல்ராணி. கடந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த அவர், இப்போது ஓரிரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு வருடங்களில் அதிக படங்களில் நடித்த ஒரே நடிகை நான்தான். சிறிது நேரம் கூட ஓய்வின்றி நடித்ததாலோ என்னவோ, திடீரென்று உடல்நிலை பாதித்தது. வீட்டில் என்னை மிகக் கடுமையாக திட்டினார்கள்.

முதலில் ரெஸ்ட் எடு, பிறகு நடிப்பை பார்த்துக் கொள்ளலாம் என்று எனது பெற்றோர் சொன்னார்கள். அதன்படி ஓய்வு எடுத்தேன். இப்போது கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்துள்ளேன். செலக்ட்டிவ்வாக படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். அதனால்தான் எனக்கு படங்கள் குறைந்தது போன்ற மாயை ஏற்பட்டுள்ளது.  தற்போது 4 புதுப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார்.

Tags : Nicky Khalani ,
× RELATED யுவன் சங்கர் ராஜாவின் மணி இன் தி பேங்க்